காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளி தேரோட்டம்


காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளி தேரோட்டம்
x
தினத்தந்தி 24 April 2019 4:45 AM IST (Updated: 24 April 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கச்சபேஸ்வரர்கோவில் வெள்ளி தேரோட்டம் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற கச்சபேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை உத்திர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் இரவு வெள்ளி தேரோட்டம் நடந்தது. இன்று (புதன் கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம், நாளை (வியாழக்கிழமை) காலை சந்திரசேகரர் தீர்த்தவாரி, இரவு தங்க இடப வாகனம், 26-ந் தேதி காலை 108 சங்காபிஷேகம், இரவு 63 நாயன்மார்கள் சிறப்பு திருமுழுக்கு வழிபாடு நடைபெறுகிறது.

27-ந்தேதி இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் சித்திரை உத்திர திருவிழா நிறைவுபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், நிர்வாக அதிகாரியுமான ஆ.குமரன், காஞ்சீபுரம் நகர செங்குந்த மகா ஜன சங்க தலைவர் வ.காளத்தி முதலியார் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Next Story