இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
திசையன்விளை,
ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 290 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையர்புரம், கூட்டப்புளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் நேற்று மாலையில் உவரியில் அஞ்சலி செலுத்தும் விதமாக பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக சென்றனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story