திருவக்கரை அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்


திருவக்கரை அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்
x
தினத்தந்தி 24 April 2019 4:15 AM IST (Updated: 24 April 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

காதல் தோல்வியால் வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே அம்புழுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் சரண்யா (வயது 24), புதுவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவரும், வாலிபர் ஒருவரும் சில ஆண்டுளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதல் தோல்வியில் முடிந்தது.

இதனால் சரண்யா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் படுக்கை அறையில் சரண்யா மயங்கிய நிலையில் கிடந்தார். நீண்டநேரமாக வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்து அவரது தாயார் அருகில் சென்று பார்த்த போது சரண்யா தனக்குத் தானே வி‌ஷ ஊசி போட்டு மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த உறவினர்கள் உதவியுடன் சரண்யாவை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இது தொடர்பாக வானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியால் நர்சு ஒருவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story