திருவண்ணாமலை அருகே, பீர்பாட்டிலால் தாக்கி வாலிபர் கொலை - 2 பேர் கைது
திருவண்ணாமலை அருகே பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா மேல்அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உத்தரகுமார் (வயது 31), தொழிலாளி. இவர் தனது மாமா சங்கராபுரத்தை சேர்ந்த மாயவன் மற்றும் அவரது நண்பர் மார்க்கண்டேயன் (30) ஆகியோருடன் சம்பவத்தன்று மேலதிகான் பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அப்போது திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(26), கண்ணக்குருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜா (23) ஆகியோர் பீர்பாட்டில் மற்றும் தடியை வைத்துக் கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதை தட்டிக்கேட்ட உத்தர குமாரை அவர்கள் இருவரும் சேர்ந்து பீர் பாட்டில் மற்றும் தடியால் தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த மார்க்கண்டேயனையும் அவர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த மார்க்கண்டேயனையும், உத்தரகுமாரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மார்க்கண்டேயன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உத்தரகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவையும், கார்த்திக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story