குறிஞ்சிப்பாடி அருகே, இருதரப்பினர் மோதல் - 6 பேர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன்குறிஞ்சிப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தயாளன் (வயது 46). இவரது மனைவி செல்வராணி(42). இவர்களுடைய மகன் சிந்தனைசெல்வன்(19). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் தமிழ்செல்வனுக்கும்(28), சுப்பிரமணி மகன் சிவபாலனுக்கும்(22) இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சிந்தனைசெல்வன் தகராறை விலக்கி விட சென்றார். இதை பார்த்த சுப்பிரமணி, செங்கற்களால் சிந்தனைசெல்வனை தாக்கினார்.
இதற்கிடையே அங்கு வந்த செல்வராணி, அவரது தம்பி கந்தன்(40), அவரது மனைவி சுபாஷினி(25) ஆகியோர் சுப்பிரமணியை தட்டிக்கேட்டனர். அப்போது சுப்பிரமணியின் ஆதரவாளர்கள் செல்வராணி தரப்பினரை இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த தயாளன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுப்பிரமணி தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த கந்தன், சுபாஷினி, செல்வராணி ஆகியோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த கந்தன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, மணிபாலன்(24), தமிழ்செல்வன், சிவபாலன், தயாளன், சிந்தனைசெல்வன் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story