தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரியான மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
டெல்லியில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் மல்யுத்த போட்டியில் 74 கிலோ எடைபிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர் நர்சிங் யாதவ். இதையடுத்து இவருக்கு மும்பை போலீசில் அதிகாரி பதவி வழங்கப்பட்டது. தற்போது இவர் மும்பை ஆயுதப்படையில் உதவி கமிஷனராக உள்ளார். நேற்று முன்தினம் அம்போலி பகுதியில் மும்பை வடமேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போதுஅவருடன் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தேர்தல் பிரசார மேடையில் இருந்ததாக கூறப்படுகிறது. விதிகளின் படி அரசு அதிகாரிகள் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது.
இது குறித்து அங்கு பணியில் இருந்த போலீசார், உயர் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்துஅம்போலி போலீசார் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மல்யுத்த வீரர் மீது துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நர்சிங் யாதவ், சஞ்சய் நிருபம் நடத்தும் ஒரு அமைப்பின் உதவியால் தான் மல்யுத்த பயிற்சி பெற்றுள்ளார். அந்த நன்றிக்கடனுக்கு தான் அவர் வந்தார், என கூறினார்.

Related Tags :
Next Story