சோனி மொபைல் புரொஜெக்டர்
கையடக்கமான எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய புரொஜெக்டர்
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் கையடக்கமான எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. சோனி எம்.பி.சி.டி. 1 என்ற பெயரில் இது வெளி வந்துள்ளது.
பொதுவாக வீடுகளில் புரொஜெக்டரை பயன்படுத்துவது என்பது பகீரத பிரயத்தனம் போல அதிக முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மினி புரொஜெக்டர் இருந்தால் அதற்கெல்லாம் அவசியம் இருக்காது.
குரோம்கேஸ்ட், பயர் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி. போர்ட் மூலம் இணைக்க முடியும். இது கையிலிருந்தால் எந்த இடத்திலும் காட்சிகளை பெரிதாக்கி பார்க்கலாம். இதன் விலை ரூ.29,990 ஆகும். அழகிய தோலினால் ஆன கேஸ் இருப்பது இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
அழகிய டைரியைப் போல இருக்கும் இந்த புரொஜெக்டரின் எடை வெறும் 80 கிராம் மட்டுமே. இது 120 அங்குலம் வரை திரையில் படங்களை தெளிவாக, துல்லியமாகக் காட்டும். இதில் 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
படங்களை துல்லியமாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது அலுவலக பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றது. லேப்டாப் மூலம் காட்சிகளை திரைப்படுத்த விரும்புவோருக்கு மிகவும் ஏற்றது.
Related Tags :
Next Story