மாவட்ட செய்திகள்

சரிகம ‘கார்வான் கோ’ ஸ்பீக்கர் + "||" + FM. Can be used as radio

சரிகம ‘கார்வான் கோ’ ஸ்பீக்கர்

சரிகம ‘கார்வான் கோ’ ஸ்பீக்கர்
எப்.எம். ரேடியோவாகவும் பயன்படுத்தலாம்
இசைப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக திகழ்கிறது கார்வான். இந்நிறுவனம் சமீபத்தில் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. ‘கார்வான் கோ’ என்ற பெயரிலான இந்த ஸ்பீக்கர்களை எடுத்துச் செல்வது எளிது.

இதன் எடை வெறும் 88 கிராம் மட்டுமே. லதா மங்கேஷ்கரின் மெல்லிசைப் பாடல்கள் உட்பட 3,000 இந்தி பாடல்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.3,990 ஆகும். நிறுவன இணையதளம் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் இது கிடைக்கும்.

இதை எப்.எம். ரேடியோவாகவும் பயன்படுத்தலாம். ஹெட்போன் மற்றும் மியூசிக் பிளேயருடன் இணைப்பதற்காக 3.5 மி.மீ. ஜாக் உள்ளது. இதை புளூடூத் மூலமும் இணைக்க முடியும்.

இதில் மைக்ரோ எஸ்.டி. கார்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் தொடர்ந்து செயல்படுவது சிறப்பாகும். மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இதன் மூலமும் இதை சார்ஜ் செய்ய முடியும்.

பயணத்தின் போது இனிய இசையைக் கேட்டு ரசிக்க கார்வான் கோ உதவும்.