மூச்சு திணறல் ஏற்படாமல் காக்கும் கண்ணாடி


மூச்சு திணறல் ஏற்படாமல் காக்கும் கண்ணாடி
x
தினத்தந்தி 24 April 2019 8:39 AM GMT (Updated: 24 April 2019 8:39 AM GMT)

இந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம்

மூச்சு விடாமல் உயிர் வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக சைக்கிள் ஓட்டும் விளையாட்டு வீரர்களுக்கு மிக வேகமாக ஓட்டும் போது மூச்சு திணறல் ஏற்படுவது சகஜம்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஸ்பீட் கிராப்ட் ஏர் கிளாஸ் என்னும் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம். அணிந்து கொள்வதற்கு மிகவும் லைட் வெயிட்டாகவும் இருக்கிறது. கீழே விழுந்தாலும் உடையாத வகையில் இந்த கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூக்கின் இருபுறமும் காந்தம் பொருத்தப்பட்ட நோஸ் பட்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. நுரையீரலில் உருவாகும் அழுத்தத்தை இந்த கண்ணாடி குறைப்பதாக கூறுகின்றனர். சுவாசிக்க வேண்டிய காற்றின் அளவையும் ஓட்டுபவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

தண்ணீர், எண்ணெய் ஆகியவை கண்ணாடி திரையில் பட்டாலும் இதன் திறன் குறையாது. சைக்கிள் ரேஸ் பங்கேற்பாளர்களுக்கு இது மிகவும் பயன்படும்.


Next Story