2 அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஆம்பூரில் பரபரப்பு


2 அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஆம்பூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் மேலும் 2 அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.மதியழகன். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மறுபடியும் அதே நபர் பெயரில் ஆம்பூர் 35-வது வார்டு செயலாளர் சேகர் மற்றும் நகர நிர்வாகி கராத்தே மணி ஆகிய 2 பேருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

2 பேரின் சாதியை சொல்லி திட்டியும், ஆபாசமாகவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரும் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதம் வருவது கட்சியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story