ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்


ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-25T02:02:51+05:30)

வாக்குகள் எண்ணும் போது பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

வரதராஜன்பேட்டை,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்தநிலையில் வாக்குகள் எண்ணும் போது பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது ஆண்டிமடம் பகுதியில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு அரசியல் கட்சியினருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்ட இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், வாக்கு எண்ணிக்கையின் போதும் அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story