விமான நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நாளை தொடங்குகிறது


விமான நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 April 2019 4:15 AM IST (Updated: 25 April 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

சோலார் மின் உற்பத்தி மூலம், விமான நிலையத்தின் மின்சார செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் புதிய விமான நிலைய முனையம் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோலார் மின் உற்பத்தி மூலம், விமான நிலையத்தின் மின்சார செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலும், விமான நிலைய வளாகத்தில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டு ஒரு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக விமான நிலையத்தில் வடக்குப் பகுதியில் ரூ.4 கோடியே 60 லட்சம் செலவில் சோலார் தகடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா நாளை விமான நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 

Next Story