நெல்லையப்பர் கோவில் ‘காந்திமதி’ யானைக்கு மருத்துவ பரிசோதனை
நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை,
குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சொந்தமான வள்ளி யானை நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது. யானை பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அந்த யானை இறந்ததாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் யானைகளுக்கு முழு உடற்தகுதி பரிசோதனை செய்திட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை, மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனைக்கு நேற்று காலை அழைத்து செல்லப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாபு, டாக்டர் செல்வமாரியப்பன் ஆகியோர் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
46 வயது கொண்ட காந்திமதி யானையின் உடற்தகுதி, உடல் தட்பவெப்பம், வெளியேறும் கழிவுகளின் தன்மை, உணவு வகைகளின் தன்மை உள்ளிட்டவைகளை டாக் டர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர். மேலும் எந்த மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும் என்று பாகனிடம், டாக்டர்கள் அறிவுறுத்தினர். பின்னர் காந்திமதி யானை நெல்லையப்பர் கோவி லுக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதுபோல் இந்த மாதத்துக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது” என்றனர்.
Related Tags :
Next Story