பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒருமாத காலமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். மேலும் பேரூராட்சி அலுவலர் சிவசங்கர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் 14 மற்றும் 15-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காந்தி சிலை எதிரே பிரதான சாலையில் காலிகுடங்களுடன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். மேலும் பேரூராட்சி அலுவலர் சிவசங்கர் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story