மாவட்டம் முழுவதும் 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு 9,944 பேர் எழுதுகின்றனர்


மாவட்டம் முழுவதும் 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு 9,944 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 26 April 2019 3:30 AM IST (Updated: 26 April 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது. இதனை 9 ஆயிரத்து 944 பேர் எழுதுகின்றனர்.

வேலூர், 

மருத்துவப்படிப்புகான நுழைவு தேர்வு (நீட்) வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எழுத 9 ஆயிரத்து 944 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்காக தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் தேர்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, கிங்ஸ்டன் இன்டர்நேஷனல் அகாடமி, வாலாஜாவில் உள்ள வேதவள்ளி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, ராணிப்பேட்டையில் உள்ள தேவ் பெல் பள்ளி, காட்பாடியில் உள்ள சிருஷ்டி வித்யாஸ்ரம் பள்ளி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சாய்நாதபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளி, மேல்விஷாரத்தில் உள்ள குளோபல் பொறியியல் கல்லூரி, காட்பாடியில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளி, கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரி, குடியாத்தத்தில் உள்ள வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் தேர்வுகள் நடைபெறுகிறது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story