வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோர்ட்டில் சரண் பணம் பட்டுவாடா தொடர்பாக வெளியான வீடியோ எதிரொலி
வாணியம்பாடியில் பணம் பட்டுவாடா தொடர்பாக பேசியது குறித்து வெளியான வீடியோ பதிவு குறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
வாணியம்பாடி,
தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த நிலையில் வருவாய்த்துறையினர் காட்பாடியில் ரூ.11½ கோடி பறிமுதல் செய்து அளித்த அறிக்கையின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பணம் வினியோகம் செய்வது தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேசிய வீடியோ வெளியானது.
இதுகுறித்து வாணியம்பாடி தாசில்தாரும், தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் நேற்று காலை வாணியம்பாடி மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story