மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலும், ஓசூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் கடந்த 18-ந் தேதி நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பதிவான வாக்குகள் மே மாதம் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டாக்டர் எஸ்.பிரபாகர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அனுமதி பெற்ற அரசியல் கட்சி முகவர்களின் வருகை பதிவேடுகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக 6 அறைகளிலும், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு அறையிலும் என மொத்தம் 7 அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி. மூலமாக அவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறும் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story