பால்கரில் பரிதாபம் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி


பால்கரில் பரிதாபம் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 25 April 2019 11:13 PM GMT (Updated: 2019-04-26T04:43:43+05:30)

பால்கரில் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசாய், 

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா பில்கார் கிராமத்தை சேர்ந்த அக்காள், தங்கை திஷா(வயது11), வேதிகா(13). இவர்களது வீட்டருகே வசித்து வந்த சிறுமி மான்சி(11). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். கோடை வெயில் அதிகமாக இருந்ததால் சிறுமிகள் நீண்ட நேரம் ஆற்றில் ஆனந்தமாக குளியல் போட்டனர்.

இந்தநிலையில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் திடீரென தன்ணீரில் மூழ்கினர். சிறுமிகளின் சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர்.

2 சிறுமிகள் பலி

இதில், மான்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்தில் வேதிகாவும் பலியானாள். திஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி சிறுமிகள் பலியான சம்பவம் வாடா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story