நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி 3 பேர் படுகாயம்


நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 April 2019 3:30 AM IST (Updated: 26 April 2019 2:38 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டறம்பள்ளி, 

நாட்டறம்பள்ளியை அடுத்த கோனேரிகுப்பம் புள்ளானேரியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 55), விவசாயி. இவர் புள்ளானேரியில் இருந்து ஆந்திர மாநிலம் மல்லானூருக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவினர்கள் ஜமுனா (35), சங்கீதா (30) ஆகிய 2 பேரும் பின்னால் உட்கார்ந்து சென்றனர். அப்போது டோல்கேட் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் பிரகாசம், ஜமுனா, சங்கீதா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக பிரகாசம், ஜமுனா ஆகிய 2 பேரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story