ஆசனூர் அருகே வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு


ஆசனூர் அருகே வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 9:46 PM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே குடும்ப தகராறில் வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தாளவாடி,

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள புதுதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 28). இவர் வாடகைக்கு சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். அவருடைய மனைவி சாந்தி (25). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் கிடையாது.

இந்த நிலையில் பாக்யராஜுக்கும், சாந்திக்கும் இடையே கடந்த 18-ந் தேதி தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். வேலைக்கு சென்றிருப்பார் என நினைத்து சாந்தியும் அவரை தேடவில்லை.

இந்த நிலையில் அரேபாளையம் அருகே உள்ள வனப்பகுதி வழியாக பொதுமக்கள் சிலர் நேற்று நடந்து சென்றார்கள். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

உடனே இதுகுறித்து ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஆண் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார் பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் இறந்து 5 அல்லது 6 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புதுதொட்டி கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story