மரக்காணம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்


மரக்காணம் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 11:31 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே காரில் கடத்திய ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம், 

கோட்டக்குப்பம் மது விலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மரக்காணத்தை அடுத்த மஞ்சக்குப்பம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்ததில், அந்த காருக்குள் 15 அட்டைப் பெட்டிகளில் 600 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story