அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: இதுவரை 41 பேர் வேட்புமனு தாக்கல்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் நாகேஸ்வரன், வெற்றிவேல், சுதாகர், செல்வக்குமார், வினோத், செந்தில்குமார், வடிவேல், பிரகாஷ், கலைராஜ், மகேஸ்வரன், ரமேஷ்குமார், கத்திஷாபானு, சாவித்ரி, சண்முகம், நூர்முகமது, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் ஜோதிகுமார், பழனிச்சாமி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சார்பில் சஞ்சய்குமார், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ராஜ்குமார், உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் ராமமூர்த்தி ஆகிய 20 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலால் உதவி ஆணையருமான மீனாட்சி பெற்று கொண்டார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வரை தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனுதாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்கள் 20 பேருடன் சேர்த்து இதுவரை அந்த தொகுதியில் 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
Related Tags :
Next Story