மெரினாவில் கடலில் குதித்து பெண் தற்கொலை மகனை போலீசார் உயிருடன் மீட்டனர்


மெரினாவில் கடலில் குதித்து பெண் தற்கொலை மகனை போலீசார் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 27 April 2019 2:45 AM IST (Updated: 27 April 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

மெரினாவில் கடலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கடலில் தத்தளித்த அவரது மகனை போலீசார் உயிருடன் மீட்டனர்.

சென்னை,

சென்னை மெரினா கடற் கரையில் அண்ணா சமாதி பின்புறம் நேற்று அதிகாலையில் கடலில் ஒரு பெண் மற்றும் வாலிபர் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

அதில் அந்த வாலிபரை மட்டும் போலீசார் உயிருடன் மீட்டனர். ஆனால் அந்த பெண்ணை கடல் அலை இழுத்துச்சென்றதால் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

மீட்கப்பட்ட வாலிபரை ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பலியான பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அண்ணாசதுக்கம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குடும்பத்தகராறில் தற்கொலை

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அவர்கள் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருடைய மனைவி ரேவதி (வயது 54) மற்றும் அவர்களுடைய மகன் சண்முகபிரியன்(25) என்பதும் தெரியவந்தது.

செல்வக்குமாருக்கும், ரேவதிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரேவதி உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர், தனது மகன் சண்முகபிரியனுடன் சேலத்தில் இருந்து பஸ்சில் சென்னை வந்தார். பின்னர் இருவரும் மெரினா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அதில் ரேவதி உயிரிழந்து விட்டதும், அவரது மகன் சண்முகபிரியனை போலீசார் உயிருடன் மீட்டதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story