ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றியின் மூலம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேச்சு


ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றியின் மூலம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 27 April 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றியின் மூலம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் என்று கே.என்.நேரு எம்.எல்.ஏ. கூறினார்.

தூத்துக்குடி,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கில் நேற்று காலை நடந்தது. தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தொகுதி பொறுப்பாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவருடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக நான் இங்கு வந்து உள்ளேன். இந்த ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதிதான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவதற்கு காரணமாக இருக்கும். வேட்பாளர் சண்முகையா அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர். அனைவரும் இணைந்து உழைத்து வெற்றி பெறுவோம். ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றியின் மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆஸ்டின் எம்.எல்.ஏ., கருங்குளம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் இரா.ஆவுடையப்பன், வீ.கருப்பசாமி பாண்டியன், ஸ்பிக்நகர் பகுதி பொறுப்பாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், ஏ.எல்.லட்சுமணன், பூங்கோதை, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தணிக்கை குழு உறுப்பினர் அப்பாவு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வி.சண்முகம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story