உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண் அள்ளிச் சென்ற 7 லாரிகள் பறிமுதல்


உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண் அள்ளிச் சென்ற 7 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2019 3:15 AM IST (Updated: 27 April 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கரம்பை மண் அள்ளிச் சென்ற 7 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தட்டார்மடம்,

உடன்குடியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு நிலத்தை மேடாக்கும் வகையில், பல்வேறு குளங்களில் இருந்து கரம்பை மண்ணை அள்ளி லாரிகளில் கொண்டு செல்கின்றனர். அதன்படி தட்டார்மடம் அருகே பள்ளக்குறிச்சி அம்பாள்குளத்தில் இருந்தும் லாரிகளில் கரம்பை மண்ணை அள்ளிச் சென்றனர்.

இந்த நிலையில் அம்பாள்குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு கரம்பை மண்ணை அள்ளியதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமையில் அதிகாரிகள், பள்ளக்குறிச்சி அம்பாள்குளத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு கரம்பை மண்ணை அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து குளத்தில் கரம்பை மண்ணை அள்ளிச் சென்ற 7 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில் 3 லாரிகளை தட்டார்மடம் போலீஸ் நிலையத்திலும், 4 லாரிகளை மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story