கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தக்கூடாது தேர்தல் ஆணையத்திற்கு எடியூரப்பா கடிதம்


கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தக்கூடாது தேர்தல் ஆணையத்திற்கு எடியூரப்பா கடிதம்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 27 April 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதாக கர்நாடக அரசு கூறியது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள், கொள் முதல் மற்றும் சேவை துறைகளில் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை, நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

பல்வேறு முறைகேடுகள்

இந்த விதிகள் அமலில் இருந்தாலும், வறட்சி, இயற்கை பேரிடரின்போது மீட்பு பணிகளை மேற்கொள்வது, குடிநீர் வினியோகம் போன்றவற்றுக்கு பொதுவாக விலக்கு உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்த நேரத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு அனுமதி வழங்குவது என்பது, தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். இந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறவும் வழிவகுக்கும்.

விதிகளை தளர்த்தக்கூடாது

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் முடிவடைந்து இருந்தாலும், இங்கு எடுக்கப்படும் முடிவுகள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதனால் வளர்ச்சி பணிகளை மேற்ெகாள்ள உடனடியாக தடை விதிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தக்கூடாது. மேலும் கடந்த 2 நாட்களில் மாநில அரசு எடுத்த அனைத்து முடிவுகளையும் கைவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story