ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் மல்லிகார்ஜுன கார்கே உறுதி


ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் மல்லிகார்ஜுன கார்கே உறுதி
x
தினத்தந்தி 27 April 2019 3:11 AM IST (Updated: 27 April 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மும்பை,

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், பா.ஜனதாவைத் தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் பின்தங்கி உள்ளன.

மோடி அரசின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அவருக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளனர். தேர்தல் முடிவுகள் வரட்டும். காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சி அமைக்கும். தேவைப்பட்டால், ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை கேட்டுப்பெறுவோம்.

தன் பெயரை சொல்லி ஓட்டு கேட்கிறார்

இதுவரை இருந்த பிரதமர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் பெயரை சொல்லித்தான் ஓட்டு கேட்டார்கள். ஆனால், தன் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் முதலாவது பிரதமர் மோடிதான்.

இது, அந்த கட்சியின் உண்மையான குணத்தை காட்டுகிறது. அவர்களுக்கு மோடி மட்டுமே இருக்கிறார், வேறு யாரும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story