நிரந்தரமான ‘இயற்கை சொத்து’
இயற்கையின் கொடையான மலைவாசஸ்தலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு வீடுகள், தொழிற்சாலைகள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த பிரச்சினை உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்கு சில பகுதிகளில் இயற்கை வளங்கள் தொழிற்சாலைகளின் பிடியில் சிக்கி தனது அழகியலை இழந்து கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட பகுதியில் சீனாவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜாக் மா, 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான ஒரு இயற்கை காட்டை, பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார். அந்த பகுதி சுரங்க தொழிற்சாலை நிறுவனங்களின் வசம் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வளங்களை இழந்துக் கொண்டிருக்கிறது.
ஜாக் மா, அங்கு தொழிற்சாலை எதையும் நிறுவும் நோக்கத்தில் விலை கொடுத்து வாங்கவில்லை. பசுமை தவழும் அந்த பகுதியை தனது இயற்கை சொத்தாக மாற்றி இருக்கிறார். ஆம்...! அழிந்து வரும் இயற்கை வளங்களை காப்பதற்காகவே ஜாக் மா, இந்த காட்டை வாங்கி, பராமரித்து வருகிறார். இதுதான் தனது நிரந்தர சொத்து என்றும் சொல்கிறார். அவரது அக்கறையான செயல்பாட்டால் அந்த பகுதியில் முன்பை விட அதிகமாகவே பசுமை பளிச்சிட தொடங்கி இருக்கிறது.
Related Tags :
Next Story