தூசி, செங்கத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
தூசி, செங்கத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூசி,
தூசி அருகே உள்ள பாண்டியம்பாக்கம் கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அனுக்காவூர் ஊராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பாண்டியம்பாக்கம் கூட்டு ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல செங்கத்தை அடுத்த இளங்குன்னி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் இளங்குன்னி - செங்கம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தற்காலிகமாக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்வதாகவும், பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை இன்னும் ஆழப்படுத்தி பழுது நீக்கி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story