அம்மூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அம்மூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
அம்மூரை அடுத்த வேலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் முதல் தெரு பகுதியில் உள்ள வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் மின் மோட்டாரை உபயோகப்படுத்தாமல் குழாயில் தண்ணீர் பிடிப்பவர்களுக்கு சரிவர தண்ணீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குறைவான நேரமே தண்ணீர் விடப்படுவதால் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பவர்கள் மட்டுமே பயன்பெறுகிறார்கள்.
இதனால் வீடுகளில் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து நிறுத்த வேண்டும் அல்லது குடிநீர் வரும் போது மின்சாரத்தை நிறுத்த வேண்டும் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று வேலம், இந்திரா நகர் முதல் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வேலம் - சோளிங்கர் சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும் என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story