புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக உருமாறி உள்ளது. இந்த புயலுக்கு பானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த புயல் இன்னும் ஓரிரு நாளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவையில் புயலை எதிர்கொள்ள அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் நேற்று 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று வழக்கத்தைவிட புதுவை கடல் பகுதி அமைதியாக காணப்பட்டது.

புதுவையில் நேற்று வானிலையிலும் மாற்றங்கள் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று அவ்வப்போது வெயில் அடித்தது. மேலும் ஆங்காங்கே திட்டு திட்டாக மேகங்களும் அவ்வப்போது வலம் வந்தன. மேலும் சில நேரங்களில் லேசான காற்றும் வீசியது.


Next Story