தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் கனிமொழி எம்.பி. பிரசாரம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சண்முகையா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கனிமொழி எம்.பி. சிலுவைபட்டி விலக்கு பகுதியில் நேற்று மாலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை மாற்றக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். தமிழகத்தில் முதியோருக்கு உதவி தொகை வழங்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினை இருப்பதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினை எதுவும் தீர்க்கப்படவில்லை.
தி.மு.க. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
நாடு முழுவதும் தற்போது வேலை இல்லாத நிலை உள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா தான். தற்போது அந்த கட்சிக்கு அ.தி.மு.க. உறுதுணையாக செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த குளமும் தூர்வாரப்படவில்லை. தூத்துக்குடியில் பல குளங்களில் மண் மேடு ஏற்பட்டு உள்ளது. மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட ஆட்சி மாற்றம் வர வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும். குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின் போது தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், 4-வது வார்டு செயலாளர் கோயில்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story