பாம்பனில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது


பாம்பனில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னம் காரணமாக நேற்று பாம்பன் துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

ராமேசுவரம்,

வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னம் காரணமாக நேற்று முன்தினம் பாம்பன் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகுகளில் மட்டும் மீனவர்கள் சென்று மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக நாட்டுப்படகு மீனவர்களையும் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Next Story