கொல்லிமலையை சேர்ந்த 20 குழந்தைகள் விற்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்கள்
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொல்லிமலையில் 20 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இல்லை. எனவே அந்த குழந்தைகள் விற்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
ராசிபுரம்,
குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கொல்லிமலை முக்கிய இடம்பெற்று உள்ளது. அதாவது இங்கிருந்து தான் பெரும்பாலான குழந்தைகள் வாங்கி விற்பனை செய்யப்பட்டு உள்ளனர். கைதான கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஓய்வுபெற்ற நர்சு அமுதவள்ளியிடம் 6 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில் பயிற்சியில் உள்ள 15 நர்சுகள் மருத்துவமனையில் உள்ள பிறப்பு பதிவேடுகளை சரிபார்த்தல், தத்து கொடுத்த குழந்தைகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிர்ச்சி தகவல்கள்
அதன்படி கொல்லிமலையில் முதன்முதலாக 1999-ல் தொடங்கப்பட்ட பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் சிறப்பு குழுவினர் நேற்று ஈடுபட்டனர். மேலும் இந்த குழுவானது வீடு, வீடாகவும் சென்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது. கொல்லிமலையில் முகாமிட்டு உள்ள இந்த குழுவினர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதன் பிறகே கொல்லிமலை பகுதியில் இருந்து எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்பது தெரியவரும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியின் போது 20 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் முறையாக தத்து கொடுக்கப்பட்டு உள்ளார்களா? இல்லை எனில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளார்களா? அல்லது கொல்லிமலையில் பிறப்பு சான்றிதழ் பெற்று விட்டு தற்போது இடம் பெயர்ந்து விட்டார்களா? எனவும் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

Related Tags :
Next Story