வெளியூர் வியாபாரிகள் வராததால் தோட்டங்களில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்
வெளியூர் வியாபாரிகள் வராததால் தோட்டங் களில் தேங்காய்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு, தும்மலப்பட்டி, கணவாய்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு தேங்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.
அவை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக மும்பைக்கு அதிகளவில் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் கணிசமான வருவாயும், வேலைவாய்ப்பும் கிடைக் கிறது. இதனால் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக் கும் தென்னை விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் பெரிய அளவில் இல்லை. மேலும் பல பகுதிகளில் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. எனினும் ஒரு சில பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர். ஆனால், மழை பெய்யாததால் தேங்காய் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது.
இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் வியாபாரிகளும் ஆந்திராவுக்கு சென்று தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். மாறாக வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி தேங்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் தேங்காய் தேங்கியுள்ளது.
வெளியூர் வியாபாரிகள் வராததால் வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தேங்காய்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதேநேரம் ஈரோடு, காங்கேயம் பகுதிகளுக்கு கொப்பரை தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், கொப்பரை தேங்காய்களுக்கான விலை குறைந்து கொண்டே வருகிறது.
ஒரு கிலோ தேங்காய் ரூ.90 மட்டுமே கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே நிரந்தர விலை கிடைக்க தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story