பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 28 April 2019 4:04 AM IST (Updated: 28 April 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு - மாட்டுங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக கல்யாணில் இருந்து வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும். இந்த ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.05 மணி முதல் பிற்பகல் 3.22 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

துறைமுக வழித்தடம்

துறைமுக வழித்தடத்தில் வடலா ரோடு - மான்கூர்டு இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை இருமார்க்கத்திலும் பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர், வாஷி செல்லும் ரெயில்கள் காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.44 மணி வரையும், பன்வெல், பேலாப்பூர், வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்கள் காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.47 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் பன்வெல்-மான்கூர்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பராமரிப்பு பணி நடைபெறும் நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை துறைமுக வழித்தட பயணிகள் மெயின் மற்றும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடங்கள் வழியாக பயணித்து கொள்ளலாம்.

மேற்கு ரெயில்வே

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி - அந்தேரி இடையே ஸ்லோ வழித்தடத்தின் இருமார்க்கத்திலும் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இந்த நேரத்தில் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் சாந்தாகுருஸ் - போரிவிலி இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த தகவல் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story