ரூ.1½ கோடி கடன் வாங்கி மோசடி: முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ. கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


ரூ.1½ கோடி கடன் வாங்கி மோசடி: முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ. கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 28 April 2019 4:09 AM IST (Updated: 28 April 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.1½ கோடி கடன் வாங்கப்பட்ட வழக்கில் முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மாண்ட்வி கிளையில் கடந்த 2000-2003-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொழில் அதிபர் மனோகர்லால் (வயது65), அவரது மகன் அமித் அகுஜா (39) ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கடன் வாங்கி மோசடி செய்து உள்ளனர்.

போலி ஆவணங்கள் தயார் செய்து இந்த மோசடிக்கு வங்கியின் அப்போதைய உதவி பொதுமேலாளராக இருந்த பகவான் ஜோஷி (73), பட்டய கணக்கர்கள் மகேஷ் போரா (63), சந்தேஷ் நாகே (51), சாந்திலால் சவுகான் (66) மற்றும் வக்கீல் யூனுஸ் மேனன் (64) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர்.

6 பேருக்கு ஆயுள்

இந்த மோசடி தொடர்பாக 7 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவில், 7 பேர் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அப்போது குற்றவாளிகள் மனோகர்லால், அமித் அகுஜா, பகவான் ஜோஷி, மகேஷ் போரா, சந்தேஷ் நாகே, சாந்திலால் சவுகான் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 கோடியே 53 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு கூறினார்.

மேலும் வக்கீல் யூனுஸ் மேனனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Next Story