மாமியார், மருமகளை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது தப்பியோடிய 2 பேருக்கு வலைவீச்சு
செந்துறையில் மாமியார், மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவரது மருமகள் ரஞ்சிதா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டு அந்த வழியே வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இந்திரா காந்தி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி இயற்கை உபாதை கழிக்க ராயல் சிட்டி பகுதியில் உள்ள ஓடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த 2 வாலிபர்கள் இந்திராகாந்தியின் வாயை பொத்தி இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவர் கூச்சலிடவே ரஞ்சிதா தனது செல்போன் வெளிச்சம் மூலம் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று தேடியுள்ளார். அப்போது ரஞ்சிதாவையும் தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அப்போது அவரும் கூச்சலிடவே அந்த வழியே சென்ற சிலர் ஓடிவந்து வாலிபர்களை பிடிக்க முயற்சித்தனர்.
கைது
அவர்களில் 2 வாலிபர்கள் ரஞ்சிதாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களில் அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 22) பொதுமக்களிடம் சிக்கினார். அவரை பொதுமக்கள் செந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் ரஞ்சிதா மற்றும் அவரது மாமியார் இந்திராகாந்தியும் காயமடைந்தனர். அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story