கோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து ரெயில்வேயில் மீண்டும் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியருக்கு ஜெயில்


கோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து ரெயில்வேயில் மீண்டும் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியருக்கு ஜெயில்
x
தினத்தந்தி 29 April 2019 4:05 AM IST (Updated: 29 April 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவை போலியாக தயாரித்து ரெயில்வேயில் மீண்டும் வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியருக்கு3 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

மேற்கு ரெயில்வே முன்னாள் பெண் ஊழியர் பரிதா கான் (வயது62). இவர் போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 1998-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரெயில்வே பணியில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறி பரிதாகான் 2009-ம் ஆண்டு ரெயில்வேயில் கோர்ட்டு உத்தரவு சான்றிதழை சமர்ப்பித்தார். அதன்மூலம் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான ஊதியத்தை அவர் பெற்றார். மேலும் பணி உயர்வும் பெற்றார்.

இந்தநிலையில், 2010-ம் ஆண்டு பரிதா கான் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இருந்து விடுதலை ஆகாமல் போலி கோர்ட்டு உத்தரவுசான்றிதழை சமர்ப்பித்து இருந்ததை ரெயில்வே நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு, கோர்ட்டு உத்தரவு சான்றிதழை போலியாக சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ரெயில்வே பெண் ஊழியருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.

Next Story