கயத்தாறு அருகே, பள்ளிக்கூட மாணவி தற்கொலை


கயத்தாறு அருகே, பள்ளிக்கூட மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2019 3:30 AM IST (Updated: 29 April 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே பள்ளிக்கூட மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்கலகுறிச்சி பஞ்சாயத்து மூர்த்தீசுவரம் கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி ஈசுவரி. இவர்களுடைய மகள் முல்லைகொடி (வயது 16). இவர் கழுகுமலையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முல்லைகொடியை வீட்டு வேலையை செய்யும்படி தாயார் ஈசுவரி சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முல்லைகொடி, வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முல்லைகொடி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story