கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18–ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழாவில் 17–ந் தேதி காலை தேரோட்டம், 18–ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

கால் நாட்டு நிகழ்ச்சி

வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக  மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story