கோடை விடுமுறையையொட்டி பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்
கோடை விடுமுறையை யொட்டி பெரம்பலூர் அறிவியல் பூங்காவில் கூட்டம் அலைமோதிவருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் அழகிய தோட்டமும், சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்களும் உள்ளன. பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் இந்த சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு தான் பெரம்பலூர் பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பூங்காவில் அழைத்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பூங்காவில் கூட்டம் அலைமோதி வருகிறது. பூங்காவிற்கு வந்த குழந்தைகள் ஊஞ்சல்ககள், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களிலும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் தங்களது குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். மேலும் ஏராளமானோர் தங்களது உறவினர்களுடன் பூங்காவிற்கு வருகின்றனர்.

Related Tags :
Next Story