ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பிரசாரம்


ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பிரசாரம்
x
தினத்தந்தி 30 April 2019 4:15 AM IST (Updated: 30 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பேசினார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நேற்று தனது பிரசாரத்தை புளியம்பட்டி அருகே உள்ள வடக்கு காரச்சேரியில் இருந்து தொடங்கினார்.

அப்போது திரளான பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து அவர் எல்லைநாயக்கன்பட்டி, தெய்வச்செயல்புரம், முருகன்புரம், வல்லாகுளம், சிங்கத்தான்குறிச்சி ஆகிய கிராமங்களில் தெரு தெருவாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து ஆவுடையப்பன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது;-

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடக்கு காரச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பல முறை பருவமழை பொய்த்து வருவதால் விவசாயிகள் விவசாய கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாய கடன்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மக்களின் குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்த்து வைக்கப்படும்.

இந்த இடைத்தேர்தல் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் ஆகும். மக்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, கருங்குளம் யூனியன் செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story