கள்ளக்காதலி கண்முன் பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபர்


கள்ளக்காதலி கண்முன் பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த வாலிபர்
x
தினத்தந்தி 30 April 2019 3:43 AM IST (Updated: 30 April 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலி கண்முன், பாம்பன் பாலத்தில் இருந்து வாலிபர் கடலில் குதித்தார். இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவனியாபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது தொடர்பை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து ராமேசுவரம் வந்த இவர்கள் பாம்பன் ரோடு பாலத்திற்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தனராம். அதனை தொடர்ந்து இருவரும் பாலத்தின் மையப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது வெங்கடேஷ் கடலுக்குள் குதித்து விட்டார். ஆனால் அந்த பெண் குதிக்கவில்லை. இதையடுத்து வெங்கடேஷ் கடலில் நீந்தி கரை சேர்ந்தார். தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் அங்கு வந்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இதுதொடர்பாக 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story