சிவகாசி –ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாலையில் தேங்கிய கழிவுநீர்
சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள கழிவுநீர் செல்லும் வாருகாலில் அடிக்கடி அடைப்பு உருவாகி கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பின்னர் புகாரின்பேரின் நகராட்சி ஊழியர்கள் அந்த அடைப்புகளை சரி செய்வது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முன்பு கழிவுநீர் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறிய மொத்த கழிவுநீரும் சாலையில் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீச தொடங்கியது.மேலும் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
இதைதொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிலர் அடைப்புகளை சரி செய்தனர். இதனை தொடர்ந்து கழிவுநீர் வாருகாலில் ஓட தொடங்கியது. அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு இப்படி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் அந்த பகுதியில் உள்ள சாலையில் சேதம் அடைய காரணமாக இருக்கிறது.
எனவே இந்த வாருகால் ஓடையை சீரமைத்து அடைப்பு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.