கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி தற்கொலை: பொள்ளாச்சி காதலன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக அவரது காதலன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். எம்.எஸ்சி. கணித பட்டதாரி. கல்லூரி மாணவியான இவருக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்த பாலன் (30) என்பவர் முகநூல் (பேஸ்புக்) மூலமாக அறிமுகம் ஆனார். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர்.
அப்போது பாலன் அந்த கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலனிடம் கேட்டுள்ளார். ஆனால் பாலன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி, பாலன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 471 (நம்பிக்கை மோசடி செய்தல்), 506 (2) (கொலை மிரட்டல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story