வானவில் : ரூ.2.48 லட்சம் விலையில் பஜாஜ் கியூட்


வானவில் : ரூ.2.48 லட்சம் விலையில் பஜாஜ் கியூட்
x
தினத்தந்தி 1 May 2019 3:58 PM IST (Updated: 1 May 2019 3:58 PM IST)
t-max-icont-min-icon

சிறிய ரகக் காரான பஜாஜ் கியூட் கார்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.

குவாட்ரி சைக்கிள் எனப்படும் சிறிய ரகக் காரான பஜாஜ் கியூட் கார்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை ரூ.2.48 லட்சமாகும். இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலின் விலை ரூ.2.78 லட்சம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 216 சி.சி., ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 13.2 ஹெச்.பி. திறன் மற்றும் 18.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

5 கியர்களைக் கொண்ட இது 2,752 மி.மீ. நீளம், 1,312 மி.மீ அகலம், 1,652 மி.மீ உயரம் கொண்டது. இந்தக் காரின் எடை 452 கி.கி மட்டுமே. இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 35 கி.மீ. தூரம் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story