வையம்பட்டி அருகே மொபட் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாப சாவு


வையம்பட்டி அருகே மொபட் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). விவசாயியான இவர், நேற்று காலை ஊரில் இருந்து கல்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வத்தமணியாரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ், காரின் முன்பகுதியில் உள்ள பேனட் மீது விழுந்தார்.

பரிதாப சாவு

அத்துடன் அவருடைய தலை முன்பகுதியில் உள்ள இரும்பு கம்பியில் (பம்பர்) சிக்கிக்கொண்டது. அவருடைய உடலுடன் சில மீட்டர் தூரம் சென்ற பின்னரே கார் நின்றது. இதில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சினிமாவை மிஞ்சிடும் வகையில் நடந்த இந்த காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story