உளுந்தூர்பேட்டையில், ரெயில் மோதி சிறுவன் பலி
உளுந்தூர்பேட்டையில் ரெயில் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ராஜேஷ் (வயது 16). இவன் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை ராஜேஷ் கடக்க முயன்றான்.
அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற ரெயில் அவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், ராஜேசின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்ட அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து ராஜேசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார், ராஜேசின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story