பாகூரில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்


பாகூரில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2019 3:15 AM IST (Updated: 3 May 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாகூர்,

பாகூர் தென் பெண்ணை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்பட்டு வந்தது. அதனை தடுக்க வருவாய் துறையினரும் போலீசாரும் சோதனை சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சோரியாங்குப்பத்தில் தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது சோரியாங்குப்பம் - குருவிநத்தம் வழியாக 3 பேர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி சென்றதை கண்டறிந்தனர். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றவர்கள் வண்டிகளில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story